< Isaias 45 >
1 Kastoy ti kuna ni Yahweh iti pinulotanna, kenni Ciro, a kinibinko ti makannawan nga imana, tapno maiturayanna dagiti nasion iti sangoananna, tapno maikkatan iti igam dagiti ar-ari, ken tapno malukatan dagiti ruangan iti sangoananna, tapno silulukat latta dagiti ruangan:
௧யெகோவாவாகிய நான் அபிஷேகம்செய்த கோரேசுக்கு முன்பாக தேசங்களைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்கிறதாவது:
2 “Umun-unaakto kenka ket patagek dagiti banbantay; burakburakekto dagiti ruangan a bronse ken tuktukkolekto dagiti landok a balunetda,
௨நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
3 ken itedkonto kenka dagiti gameng ti kinasipnget ken dagiti kinabaknang a naidulin, tapno maammoam a siak a ni Yahweh, ti mangaw-awag kenka babaen iti naganmo, Siak a Dios ti Israel.
௩உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா நானே என்று நீ அறியும்படிக்கு,
4 Para iti pagsayaatan ti adipenko a ni Jacob, ken ti Israel a pinilik, inawaganka babaen iti naganmo: inikkanka iti pakaidayawam, numan pay saannak nga am-ammo.
௪வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்து, இரகசிய இடங்களில் இருக்கிற பொக்கிஷங்களையும், மறைவிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு பெயர் சூட்டினேன்.
5 Siak ni Yahweh, ket awanen ti sabali pay; awanen ti Dios no di siak laeng. Ikkanka iti igam para iti gubat, numan pay saannak nga am-ammo;
௫நானே யெகோவா, வேறொருவர் இல்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.
6 tapno maammoan dagiti tattao manipud iti pagsingsingisingan ti init, ken manipud iti laud, nga awan ti dios no di siak laeng: Siak ni Yahweh, ket awanen ti sabali pay.
௬என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது மறைகிறகிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே யெகோவா, வேறொருவர் இல்லை.
7 Inaramidko ti lawag ken pinarsuak ti kinasipnget; inyegko ti talna ken mangar-aramidak kadagiti didigra; Siak ni Yahweh, a mangar-aramid kadagitoy amin a banbanag.
௭ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; யெகோவாவாகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.
8 Dakayo a langit, agtudokayo! Bay-an nga agtudo ti tangatang iti kinalinteg a pannakaisalakan. Sagepsepen koma daytoy ti daga, tapno agrusing koma ti pannakaisalakan, ken agtubo met ti kinalinteg. Siak, a ni Yahweh, ket pinarsuak dagitoy a dua.
௮வானங்களே, மேலிருந்து பொழியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப் பொழிவதாக; பூமி திறந்து, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்.
9 Asi pay ti siasinoman a makisinnupiat iti nangaramid kenkuana! Maysa a banga kadagiti amin a banga iti daga! Nasken kadi nga ibaga ti pila iti agdamdamili, 'Ania ti ar-aramidem?' wenno, 'Ania ti inar-aramidmo—awan kadi imam idi inaramidmo daytoy?'
௯மண்ணால் செய்யப்பட்டவைகளைப்போன்ற ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ, களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லமுடியுமோ? உன்னால் உருவாக்கப்பட்டவை: அவருக்குக் கைகள் இல்லையென்று சொல்லலாமோ?
10 Asi pay ti agkuna iti maysa nga ama, 'Ania ngay daytoy nga iputotmo?' wenno iti maysa nga ina, 'Ania ngay daytoy nga ipasngaymo?'
௧0தகப்பனை நோக்கி: ஏன் பிறக்கச்செய்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றெடுத்தாய் என்றும் சொல்கிறவனுக்கு ஐயோ,
11 Kastoy ti kuna ni Yahweh, a Nasantoan ti Israel, a Namarsua kenkuana: 'Maipapan kadagiti banbanag a mapasamakto, tubngarennak kadi maipanggep kadagiti annakko? Ibagam kadi kaniak no ania ti aramidek maipapan kadagiti aramid dagiti imak?'
௧௧இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள்.
12 Inaramidko ti daga ken pinarsuak ti tao iti rabaw daytoy. Dagiti imak ti nangiyukrad kadagiti langit, ken imbilinko kadagiti amin a bitbituen nga agparangda.
௧௨நான் பூமியை உண்டாக்கி, நானே அதின்மேல் இருக்கிற மனிதனைப் படைத்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.
13 Tinignayko ni Ciro iti kinalinteg, ken papintasekto dagiti amin a pagnaanna. Bangonennanto ti suidadko; paawidennanto dagiti tattaok a naitalaw a kas balud, ket saan a gapu iti bayad wenno pasuksok,”' kuna ni Yahweh a Mannakabalin-amin.
௧௩நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களை விலையில்லாமலும் லஞ்சமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
14 Kastoy ti kuna ni Yahweh, “Dagiti urnong ti Egipto ken dagiti tagilako ti Etiopia agraman dagiti Sabeos a natatayag a tattao, ket maiyegto kenka. Kukuamto amin dagitoy. Surutendakanto, nakakawardanto nga umay. Agruknoydanto kenka ken makipakpakaasidanto kenka a kunada, 'Awan duadua nga adda kenka ti Dios, ken awanen ti sabali no di laeng isuna.’”
௧௪எகிப்தின் வருமானமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், உயரமான ஆட்களாகிய சபேயரின் வியாபார லாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனே மாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப் பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம் செய்வார்கள் என்று யெகோவா சொல்கிறார்.
15 Pudno a sika ti Dios a saan a makitkita, Dios ti Israel, a Mannangisalakan.
௧௫இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் உண்மையாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்.
16 Maibabaindanto amin ken sangsangkamaysadanto a maipababa; dagiti agkitkitikit kadagiti didiosen ket agbiagto iti pannakaibabain.
௧௬சிலைகளை உண்டாக்குகிற அனைவரும் வெட்கப்பட்டு அவமானமடைந்து, ஏகமாகக் கலங்கிப்போவார்கள்.
17 Ngem isalakanto ni Yahweh ti Israel iti agnanayon a pannakaisalakan; saankanto a pulos a maibabain manen.
௧௭இஸ்ரவேலோ, யெகோவாவாலே நிலையான காப்பாற்றுதலினால் காப்பாற்றப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.
18 Kastoy ti kuna ni Yahweh, a namarsua kadagiti langit, ti pudno a Dios a namarsua iti daga ken nangaramid iti daytoy, ti nangipasdek iti daytoy. Inaramidna daytoy, saan a kas maysa a langalang, ngem inaramidna daytoy a pagnaedan: “Siak ni Yahweh, ket awanen sabali pay.
௧௮வானங்களைப் படைத்து பூமியையும் வெறுமையாக இருக்கும்படிப் படைக்காமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை நிலைநிறுத்தின தேவனாகிய யெகோவா சொல்கிறதாவது: நானே யெகோவா, வேறொருவர் இல்லை.
19 Saan a nalimed ti pannakisaritak, kadagiti nalimed a lugar; saanko nga imbaga kadagiti kaputotan ni Jacob, 'Sapulendak!' ket awan gayam serbi iti panangsapulda kaniak. Siak ni Yahweh, a sipupudno nga agsasao; ibagbagak dagiti nalinteg a banbanag.
௧௯நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; வீணாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப் பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற யெகோவா.
20 Aguummongkayo ket umaykayo! Aguummongkayo amin, dakayo a napagtalaw manipud kadagiti nasion! Maagda, dagiti mangaw-awit kadagiti imahen ken dagiti agkarkararag kadagiti didiosen a saan a makaisalakan.
௨0தேசங்களினின்று தப்பினவர்களே, கூட்டங்கூடி வாருங்கள்; ஏகமாகச் சேருங்கள்; தங்கள் மரத்தாலான சிலையைச் சுமந்து, காப்பாற்றமாட்டாத தெய்வத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள்.
21 Umasidegkayo ket ibagayo kaniak, iparangyo dagiti pammaneknek! Agkaykaysada koma nga agpanggep. Siasino ti nangipakita iti daytoy idi un-unana? Siasino ti nangiwaragawag iti daytoy? Saan kadi a Siak, a ni Yahweh? Ken awanen ti Dios malaksid kaniak, maysa a nalinteg a Dios ken Mangisalakan; awan iti sabali no di laeng siak.
௨௧நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாக யோசனைசெய்யுங்கள்; இதை ஆரம்பகாலமுதற்கொண்டு விளங்கச்செய்து, அந்நாள் துவங்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.
22 Agsublikayo kaniak ket maisalakankayo, amin a pungto ti daga; ta siak ti Dios, ket awanen ti sabali a dios.
௨௨பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது காப்பாற்றப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.
23 'Agsapataak, ibagak ti nalinteg a pagannurotak, ken saanto a maibabawi daytoy: Agparintumengto kaniak ti tunggal tumeng, agkarinto kaniak ti tunggal dila.
௨௩முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே வாக்குக் கொடுத்திருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.
24 Ibagbagana, “Kenni Yahweh laeng ti pannakaisalakan ken pigsa.''''' Amin dagiti makaunget kenkuana ket agbainto iti msangngoananna.
௨௪யெகோவாவிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாக எரிச்சல் கொண்டிருக்கிற அனைவரும் வெட்கப்படுவார்கள்.
25 Kenni Yahweh, amin dagiti kaputotan ti Israel ket maibilangto a nalinteg; agpannakkeldanto gapu iti naaramidanna.
௨௫இஸ்ரவேலின் சந்ததியாகிய அனைவரும் யெகோவாவுக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்.