< Genesis 7 >
1 Kinuna ni Yahweh kenni Noe, “Umayka iti uneg iti daong, sika ken dagiti amin a bumalaymo, ta nakitak a nalintegka iti imatangko iti daytoy a henerasion.
௧யெகோவா நோவாவை நோக்கி: “நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் கப்பலுக்குள் செல்லுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.
2 Iti tunggal nadalus nga ayup, mangitugotka iti sagpipito a lallaki ken sagpipito a babbai. Ken kadagiti ayup a saan a nadalus, mangitugotka iti dua, maysa a lalaki ken maysa a babai.
௨பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடு காக்கும்பொருட்டு, நீ சுத்தமான அனைத்து மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக ஏழு ஏழு ஜோடியும், சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடியும்,
3 Kasta met kadagiti billit iti tangatang, mangitugotka iti pito a lallaki ken pito a babbai, tapno mataginayonda iti rabaw ti daga.
௩ஆகாயத்துப் பறவைகளிலும், ஆணும் பெண்ணுமாக ஏழு ஏழு ஜோடியும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.
4 Ta kalpasan iti pito nga aldaw, pagtuduekto iti rabaw ti daga iti uppat a pulo nga aldaw ken uppat a pulo a rabii. Dadaelekto ti tunggal sibibiag a banbanag nga inaramidko, manipud iti rabaw ti daga.”
௪இன்னும் ஏழுநாட்கள் சென்றபின்பு, 40 நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையைப் பெய்யச்செய்து, நான் உண்டாக்கின உயிரினங்கள் அனைத்தையும் பூமியின்மேல் இல்லாமல் அழித்துப்போடுவேன்” என்றார்.
5 Inaramid ni Noe ti amin nga imbilin ni Yahweh kenkuana.
௫நோவா தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.
6 Agtawen ni Noe iti innem a gasut idi immay ti layus iti rabaw ti daga.
௬வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது, நோவா 600 வயதுள்ளவனாயிருந்தான்.
7 Simrek ni Noe, dagiti annakna, ti asawana, ken dagiti assawa dagiti annakna iti daong gapu iti danum ti layus.
௭வெள்ளப்பெருக்கிற்குத் தப்பும்படி நோவாவும் அவனோடு அவனுடைய மகன்களும், அவனுடைய மனைவியும், அவனுடைய மகன்களின் மனைவிகளும் கப்பலுக்குள் சென்றார்கள்.
8 Dagiti nadalus nga ayup ken dagiti saan a nadalus nga ayup, dagiti billit, ken amin nga agkarkarayam iti rabaw ti daga
௮தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும்,
9 sagdudua, lalaki ken babai, immayda kenni Noe ket simrekda iti daong, kas iti imbilin ti Dios kenni Noe.
௯ஆணும் பெண்ணும் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து, கப்பலுக்குள் சென்றன.
10 Napasamak a kalpasan iti pito nga aldaw, immay ti danum ti layus iti rabaw ti daga.
௧0ஏழுநாட்கள் சென்றபின்பு பூமியின்மேல் வெள்ளப்பெருக்கு உண்டானது.
11 Iti maika-innem a gasut a tawen ni Noe, iti maikadua a bulan, iti maikasangapulo ket pito nga aldaw ti bulan, iti isu met laeng nga aldaw, pimsuak dagiti amin nga ubbog ti dakkel a taaw iti uneg ti daga, ken naglukat dagiti tawa ti langit.
௧௧நோவாவுக்கு 600 வயதாகும் வருடம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்த நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறந்தன.
12 Nangrugi ti tudo ket nagtinnag iti rabaw ti daga iti uppat a pulo nga aldaw ken uppat a pulo a rabii.
௧௨நாற்பது நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.
13 Iti dayta met laeng nga aldaw, simrek iti daong ni Noe ken dagiti annakna, ni Sem, ni Ham kenni Jafet, ken ti asawa ni Noe, ken dagiti tallo nga assawa dagiti annakna.
௧௩அன்றையத்தினமே நோவாவும், நோவாவின் மகன்களாகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவனுடைய மகன்களின் மூன்று மனைவிகளும், கப்பலுக்குள் சென்றார்கள்.
14 Simrekda a kaduada dagiti atap nga ayup segun iti kitada, ken dagiti tunggal dingwen segun iti kitada, ken dagiti tunggal agkarkarayam a banag iti rabaw ti daga segun iti kitada, ken dagiti tunggal billit segun iti kitada, ken dagiti tunggal kita iti parsua nga addaan kadagiti payyak.
௧௪அவர்களோடு வகைவகையான அனைத்துவிதக் காட்டுமிருகங்களும், வகைவகையான அனைத்துவித நாட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற வகைவகையான அனைத்துவித ஊரும் பிராணிகளும், வகைவகையான அனைத்துவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள அனைத்துவிதப் பறவைகளும் சென்றன.
15 Dua kadagiti amin a lasag nga addaan anges ti biag ket immay kenni Noe ken simrek iti uneg ti daong.
௧௫இப்படியே ஜீவசுவாசமுள்ள உயிரினங்களெல்லாம் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து கப்பலுக்குள் சென்றன.
16 Dagiti ayup a simrek ket lalaki ken babai kadagiti amin a lasag; simrekda a kas iti imbilin ti Dios kenkuana. Ket inrikep ni Yahweh ti ruangan idi nakastrekdan.
௧௬தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக அனைத்துவித உயிரினங்களும் உள்ளே சென்றன; அப்பொழுது யெகோவா அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்.
17 Kalpasanna, immay ti layus iti rabaw ti daga iti las-ud iti uppat a pulo nga aldaw, ket dimmakkel ti danum ket intapawna ti daong. Timpaw daytoy manipud iti rabaw ti daga.
௧௭வெள்ளப்பெருக்கு 40 நாட்கள் பூமியின்மேல் இருந்தபோது தண்ணீர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அது பூமிக்குமேல் மிதந்தது.
18 Immay ti napegges ken napigsa a danum ket dimmakkel unay daytoy iti rabaw ti daga, ket timpaw ti daong iti danum.
௧௮தண்ணீர் பெருவெள்ளமாகி பூமியின்மேல் மிகவும் பெருகியது; கப்பலானது தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது.
19 Nagpangpangato ti danum manipud iti rabaw ti daga. Naan-anay a linipus ti danum dagiti amin a nangangato a banbantay nga adda iti baba ti entero a langit.
௧௯தண்ணீர் பூமியின்மேல் மிகவும் அதிகமாகப் பெருகியதால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.
20 Ngimmato ti danum iti sangapulo ket lima a cubits manipud kadagiti tuktok dagiti bantay.
௨0மூடப்பட்ட மலைகளுக்கு மேலாகப் 22 அடி உயரத்திற்குத் தண்ணீர் பெருகியது.
21 Natay amin nga agbibiag nga aggargaraw iti rabaw ti daga: dagiti billit, dagiti dingwen, dagiti atap nga ayup, dagiti amin nga aguummong a parsua iti rabaw ti daga, ken amin a sangkatao-an.
௨௧அப்பொழுது உயிரினங்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் அனைத்தும், எல்லா மனிதர்களும், பூமியின்மேல் வாழ்கிறவைகள் அனைத்தும் இறந்தன.
22 Amin dagiti agbibiag a naipuyot ti espiritu ti biag kadagiti agungda, amin dagiti adda iti daga, ket natay.
௨௨நிலப்பரப்பு எல்லாவற்றிலும் இருந்த உயிருள்ள அனைத்தும் இறந்துபோயின.
23 Napukaw ngarud amin dagiti agbibiag nga adda iti rabaw ti daga, ti sangkatao-an ken dagiti dadakkel nga ayup, dagiti agkarkarayam, ken dagiti billit iti tangatang. Nadadaelda amin manipud iti daga. Ni Noe laeng ken dagiti kakaduana iti daong ti nabati.
௨௩மனிதர்கள்முதல் மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை, பூமியின்மீது இருந்த உயிருள்ள அனைத்தும் அழிக்கப்பட்டு, அவைகள் பூமியில் இல்லாமல் ஒழிந்தன; நோவாவும் அவனோடு கப்பலிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.
24 Inturayan ti danum ti daga iti las-ud iti sangagasut ket limapulo nga aldaw.
௨௪தண்ணீர் பூமியை 150 நாட்கள் மூடிக்கொண்டிருந்தது.