< דברי הימים א 2 >
אלה בני ישראל ראובן שמעון לוי ויהודה יששכר וזבלון׃ | 1 |
௧இஸ்ரவேலின் மகன்கள் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
דן יוסף ובנימן נפתלי גד ואשר׃ | 2 |
௨தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.
בני יהודה ער ואונן ושלה שלושה נולד לו מבת שוע הכנענית ויהי ער בכור יהודה רע בעיני יהוה וימיתהו׃ | 3 |
௩யூதாவின் மகன்கள் ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று மகன்களும் சூவாவின் மகளான கானானிய பெண்ணிடம் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த மகன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாதவனானதால் அவர் அவனைக் கொன்றுபோட்டார்.
ותמר כלתו ילדה לו את פרץ ואת זרח כל בני יהודה חמשה׃ | 4 |
௪யூதாவின் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் மகன்கள் எல்லோரும் ஐந்துபேர்.
௫பாரேசின் மகன்கள் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
ובני זרח זמרי ואיתן והימן וכלכל ודרע כלם חמשה׃ | 6 |
௬சேராவின் மகன்கள் எல்லோரும் சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
ובני כרמי עכר עוכר ישראל אשר מעל בחרם׃ | 7 |
௭சாபத்தீடான காரியத்திலே துரோகம்செய்து இஸ்ரவேலைக் கலங்கச்செய்த ஆகார் என்பவன் கர்மீ மகன்களில் ஒருவன்.
௮ஏத்தானின் மகன்கள் அசரியா முதலானவர்கள்.
ובני חצרון אשר נולד לו את ירחמאל ואת רם ואת כלובי׃ | 9 |
௯எஸ்ரோனுக்குப் பிறந்த மகன்கள் யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
ורם הוליד את עמינדב ועמינדב הוליד את נחשון נשיא בני יהודה׃ | 10 |
௧0ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா சந்ததியின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
ונחשון הוליד את שלמא ושלמא הוליד את בעז׃ | 11 |
௧௧நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
ובעז הוליד את עובד ועובד הוליד את ישי׃ | 12 |
௧௨போவாஸ் ஓபேத்தைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
ואישי הוליד את בכרו את אליאב ואבינדב השני ושמעא השלישי׃ | 13 |
௧௩ஈசாய் தன்னுடைய மூத்த மகன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் மகனையும், சம்மா என்னும் மூன்றாம் மகனையும்,
נתנאל הרביעי רדי החמישי׃ | 14 |
௧௪நெதனெயேல் என்னும் நான்காம் மகனையும், ரதாயி என்னும் ஐந்தாம் மகனையும்,
௧௫ஓத்சேம் என்னும் ஆறாம் மகனையும், தாவீது என்னும் ஏழாம் மகனையும் பெற்றான்.
ואחיתיהם צרויה ואביגיל ובני צרויה אבשי ויואב ועשה אל שלשה׃ | 16 |
௧௬அவர்களுடைய சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் மகன்கள், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர்.
ואביגיל ילדה את עמשא ואבי עמשא יתר הישמעאלי׃ | 17 |
௧௭அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலனாகிய ஏத்தேர் என்பவன்.
וכלב בן חצרון הוליד את עזובה אשה ואת יריעות ואלה בניה ישר ושובב וארדון׃ | 18 |
௧௮எஸ்ரோனின் மகன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன்னுடைய மனைவியாகிய அசுபாளாலே பெற்ற மகன்கள் ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள்.
ותמת עזובה ויקח לו כלב את אפרת ותלד לו את חור׃ | 19 |
௧௯அசுபாள் இறந்த பின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.
וחור הוליד את אורי ואורי הוליד את בצלאל׃ | 20 |
௨0ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான்.
ואחר בא חצרון אל בת מכיר אבי גלעד והוא לקחה והוא בן ששים שנה ותלד לו את שגוב׃ | 21 |
௨௧பின்பு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தினுடைய தகப்பனாகிய மாகீரினுடைய மகளைத் திருமணம்செய்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.
ושגוב הוליד את יאיר ויהי לו עשרים ושלוש ערים בארץ הגלעד׃ | 22 |
௨௨செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்து மூன்று ஊர்கள் இருந்தது.
ויקח גשור וארם את חות יאיר מאתם את קנת ואת בנתיה ששים עיר כל אלה בני מכיר אבי גלעד׃ | 23 |
௨௩கெசூரும், ஆராமும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் எடுத்துக்கொண்டார்கள்; இவர்கள் எல்லோரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் மகன்கள்.
ואחר מות חצרון בכלב אפרתה ואשת חצרון אביה ותלד לו את אשחור אבי תקוע׃ | 24 |
௨௪காலேபினுடைய ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்தபின்பு, எஸ்ரோனின் மனைவியாகிய அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள்.
ויהיו בני ירחמאל בכור חצרון הבכור רם ובונה וארן ואצם אחיה׃ | 25 |
௨௫எஸ்ரோனுக்கு முதலில் பிறந்த யெர்மெயேலின் மகன்கள் ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.
ותהי אשה אחרת לירחמאל ושמה עטרה היא אם אונם׃ | 26 |
௨௬அத்தாராள் என்னும் பெயருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய்.
ויהיו בני רם בכור ירחמאל מעץ וימין ועקר׃ | 27 |
௨௭யெர்மெயேலுக்கு முதலில் பிறந்த ராமின் மகன்கள் மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள்.
ויהיו בני אונם שמי וידע ובני שמי נדב ואבישור׃ | 28 |
௨௮ஓனாமின் மகன்கள் சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் மகன்கள் நாதாப், அபிசூர் என்பவர்கள்.
ושם אשת אבישור אביהיל ותלד לו את אחבן ואת מוליד׃ | 29 |
௨௯அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள்.
ובני נדב סלד ואפים וימת סלד לא בנים׃ | 30 |
௩0நாதாபினுடைய மகன்கள் சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான்.
ובני אפים ישעי ובני ישעי ששן ובני ששן אחלי׃ | 31 |
௩௧அப்பாயிமின் மகன் இஷி; இஷியின் மகன் சேசான்; சேசானின் மகள் அக்லாய்.
ובני ידע אחי שמי יתר ויונתן וימת יתר לא בנים׃ | 32 |
௩௨சம்மாயினுடைய சகோதரனாகிய யாதாவினுடைய மகன்கள், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்தான்.
ובני יונתן פלת וזזא אלה היו בני ירחמאל׃ | 33 |
௩௩யோனத்தானின் மகன்கள், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் சந்ததி.
ולא היה לששן בנים כי אם בנות ולששן עבד מצרי ושמו ירחע׃ | 34 |
௩௪சேசானுக்கு மகள்களைத் தவிர மகன்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பெயருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
ויתן ששן את בתו לירחע עבדו לאשה ותלד לו את עתי׃ | 35 |
௩௫சேசான் தன்னுடைய மகளைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்கு திருமணம் செய்துகொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.
ועתי הליד את נתן ונתן הוליד את זבד׃ | 36 |
௩௬அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.
וזבד הוליד את אפלל ואפלל הוליד את עובד׃ | 37 |
௩௭சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான்.
ועובד הוליד את יהוא ויהוא הוליד את עזריה׃ | 38 |
௩௮ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான்.
ועזריה הליד את חלץ וחלץ הליד את אלעשה׃ | 39 |
௩௯அசரியா எலேசைப் பெற்றான்; ஏலேஸ் எலெயாசாவைப் பெற்றான்.
ואלעשה הליד את ססמי וססמי הליד את שלום׃ | 40 |
௪0எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லூமைப் பெற்றான்.
ושלום הוליד את יקמיה ויקמיה הליד את אלישמע׃ | 41 |
௪௧சல்லூம் எக்கமியாவைப் பெற்றான்; எக்கமியா எலிஷாமாவைப் பெற்றான்.
ובני כלב אחי ירחמאל מישע בכרו הוא אבי זיף ובני מרשה אבי חברון׃ | 42 |
௪௨யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் மகன்கள் முதலில் பிறந்த சீப்பின் தகப்பனாகிய மேசாவும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் மகன்களுமே.
ובני חברון קרח ותפח ורקם ושמע׃ | 43 |
௪௩எப்ரோனின் மகன்கள் கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா என்பவர்கள்.
ושמע הוליד את רחם אבי ירקעם ורקם הוליד את שמי׃ | 44 |
௪௪செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான்.
ובן שמי מעון ומעון אבי בית צור׃ | 45 |
௪௫சம்மாயின் மகன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
ועיפה פילגש כלב ילדה את חרן ואת מוצא ואת גזז וחרן הליד את גזז׃ | 46 |
௪௬காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான்.
ובני יהדי רגם ויותם וגישן ופלט ועיפה ושעף׃ | 47 |
௪௭யாதாயின் மகன்கள் ரேகேம், யோதாம், கேசான், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள்.
פלגש כלב מעכה ילד שבר ואת תרחנה׃ | 48 |
௪௮காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள்.
ותלד שעף אבי מדמנה את שוא אבי מכבנה ואבי גבעא ובת כלב עכסה׃ | 49 |
௪௯அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் மகள் அக்சாள் என்பவள்.
אלה היו בני כלב בן חור בכור אפרתה שובל אבי קרית יערים׃ | 50 |
௫0எப்ராத்தாளிடம் முதலில் பிறந்த ஊருடைய மகனாகிய காலேபினுடைய மகன்கள் கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
שלמא אבי בית לחם חרף אבי בית גדר׃ | 51 |
௫௧பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே.
ויהיו בנים לשובל אבי קרית יערים הראה חצי המנחות׃ | 52 |
௫௨கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் மகன்கள், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
ומשפחות קרית יערים היתרי והפותי והשמתי והמשרעי מאלה יצאו הצרעתי והאשתאלי׃ | 53 |
௫௩கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், இத்ரியர்களும் பூகியர்களும் சுமாத்தியர்களும் மிஸ்ராவியர்களுமே; இவர்களிடம் சோராத்தியர்களும், எஸ்தாவோலியர்களும் பிறந்தார்கள்.
בני שלמא בית לחם ונטופתי עטרות בית יואב וחצי המנחתי הצרעי׃ | 54 |
௫௪சல்மாவின் சந்ததிகள் பெத்லெகேமியர்களும், நெத்தோப்பாத்தியர்களும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊர்க்காரர்களும், மானாத்தியர்களிலும் சோரியர்களிலும் பாதி மக்களுமே.
ומשפחות ספרים ישבו יעבץ תרעתים שמעתים שוכתים המה הקינים הבאים מחמת אבי בית רכב׃ | 55 |
௫௫யாபேசில் குடியிருந்த வேத வல்லுனர்களுடைய வம்சங்கள் திராத்தியர்களும் சிமாத்தியர்களும் சுக்காத்தியர்களுமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியார்களான கேனியர்கள் இவர்களே.