< תהילים 92 >
מזמור שיר ליום השבת ב טוב להדות ליהוה ולזמר לשמך עליון | 1 |
௧ஓய்வுநாளின் பாடல். யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே, உமது நாமத்தைப் புகழ்ந்து பாடுவதும்,
להגיד בבקר חסדך ואמונתך בלילות | 2 |
௨பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,
עלי-עשור ועלי-נבל עלי הגיון בכנור | 3 |
௩காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும்.
כי שמחתני יהוה בפעלך במעשי ידיך ארנן | 4 |
௪யெகோவாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் செயல்களுக்காக ஆனந்த சத்தமிடுவேன்.
מה-גדלו מעשיך יהוה מאד עמקו מחשבתיך | 5 |
௫யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.
איש-בער לא ידע וכסיל לא-יבין את-זאת | 6 |
௬மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; மூடன் அதை உணரமாட்டான்.
בפרח רשעים כמו עשב ויציצו כל-פעלי און להשמדם עדי-עד | 7 |
௭துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
௮யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர்.
כי הנה איביך יהוה-- כי-הנה איביך יאבדו יתפרדו כל-פעלי און | 9 |
௯யெகோவாவே, உமது எதிரிகள் அழிவார்கள்; உமது எதிரிகள் அழிந்தேபோவார்கள்; எல்லா அக்கிரமக்காரர்களும் சிதறப்பட்டுபோவார்கள்.
ותרם כראים קרני בלתי בשמן רענן | 10 |
௧0என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறேன்.
ותבט עיני בשורי בקמים עלי מרעים-- תשמענה אזני | 11 |
௧௧என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்; எனக்கு விரோதமாக எழும்புகிற துன்மார்க்கர்களுக்கு நேரிடுவதை என்னுடைய காது கேட்கும்.
צדיק כתמר יפרח כארז בלבנון ישגה | 12 |
௧௨நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
שתולים בבית יהוה בחצרות אלהינו יפריחו | 13 |
௧௩யெகோவாவுடைய ஆலயத்திலே நடப்பட்டவர்கள் எங்களுடைய தேவனுடைய முற்றங்களில் செழித்திருப்பார்கள்.
עוד ינובון בשיבה דשנים ורעננים יהיו | 14 |
௧௪யெகோவா உத்தமரென்றும், என்னுடைய கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கச்செய்யும்படி,
להגיד כי-ישר יהוה צורי ולא-עלתה (עולתה) בו | 15 |
௧௫அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாக இருப்பார்கள்.