< תהילים 118 >

הודו ליהוה כי-טוב כי לעולם חסדו 1
யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
יאמר-נא ישראל כי לעולם חסדו 2
அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக.
יאמרו-נא בית-אהרן כי לעולם חסדו 3
அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.
יאמרו-נא יראי יהוה כי לעולם חסדו 4
அவர் கிருபை என்றுமுள்ளதென்று, யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.
מן-המצר קראתי יה ענני במרחב יה 5
நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
יהוה לי לא אירא מה-יעשה לי אדם 6
யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்வான்?
יהוה לי בעזרי ואני אראה בשנאי 7
எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் யெகோவா என்னோடு இருக்கிறார்; என்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
טוב לחסות ביהוה-- מבטח באדם 8
மனிதனை நம்புவதைவிட, யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
טוב לחסות ביהוה-- מבטח בנדיבים 9
பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
כל-גוים סבבוני בשם יהוה כי אמילם 10
௧0எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
סבוני גם-סבבוני בשם יהוה כי אמילם 11
௧௧என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
סבוני כדבורים-- דעכו כאש קוצים בשם יהוה כי אמילם 12
௧௨தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
דחה דחיתני לנפל ויהוה עזרני 13
௧௩நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; யெகோவாவோ எனக்கு உதவி செய்தார்.
עזי וזמרת יה ויהי-לי לישועה 14
௧௪யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.
קול רנה וישועה--באהלי צדיקים ימין יהוה עשה חיל 15
௧௫நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
ימין יהוה רוממה ימין יהוה עשה חיל 16
௧௬யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
לא-אמות כי-אחיה ואספר מעשי יה 17
௧௭நான் சாகாமல், பிழைத்திருந்து, யெகோவாவுடைய செய்கைகளை விவரிப்பேன்.
יסר יסרני יה ולמות לא נתנני 18
௧௮யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
פתחו-לי שערי-צדק אבא-בם אודה יה 19
௧௯நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் நுழைந்து யெகோவாவை துதிப்பேன்.
זה-השער ליהוה צדיקים יבאו בו 20
௨0யெகோவாவின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் நுழைவார்கள்.
אודך כי עניתני ותהי-לי לישועה 21
௨௧நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்.
אבן מאסו הבונים-- היתה לראש פנה 22
௨௨வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லானது.
מאת יהוה היתה זאת היא נפלאת בעינינו 23
௨௩அது யெகோவாவாலே ஆனது, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
זה-היום עשה יהוה נגילה ונשמחה בו 24
௨௪இது யெகோவா உண்டாக்கின நாள்; இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம்.
אנא יהוה הושיעה נא אנא יהוה הצליחה נא 25
௨௫யெகோவாவே, இரட்சியும்; யெகோவாவே, காரியத்தை வாய்க்கச்செய்யும்.
ברוך הבא בשם יהוה ברכנוכם מבית יהוה 26
௨௬யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
אל יהוה--ויאר-לנו אסרו-חג בעבתים--עד קרנות המזבח 27
௨௭யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
אלי אתה ואודך אלהי ארוממך 28
௨௮நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.
הודו ליהוה כי-טוב כי לעולם חסדו 29
௨௯யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.

< תהילים 118 >