< Jérémie 32 >
1 Telle fut la parole qui fut adressée à Jérémie de la part de Yahvé, la dixième année de Sédécias, roi de Juda, qui était la dix-huitième année de Nabuchodonosor.
௧நேபுகாத்நேச்சாரின் அரசாட்சியின் பதினெட்டாம் வருடத்தில் சரியாக யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருடத்தில், யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
2 En ce temps-là, l'armée du roi de Babylone assiégeait Jérusalem. Jérémie, le prophète, était enfermé dans la cour des gardes, qui était dans la maison du roi de Juda.
௨அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றுகை போட்டிருந்தது; எரேமியா தீர்க்கதரிசியோ, யூதா ராஜாவின் அரண்மனையிலுள்ள காவல் நிலையத்தின் முற்றத்தில் அடைக்கப்பட்டிருந்தான்.
3 Car Sédécias, roi de Juda, l'avait fait taire, en disant: Pourquoi prophétises-tu, en disant: Yahvé dit: Voici, je livre cette ville entre les mains du roi de Babylone, et il la prendra;
௩ஏனென்றால், இதோ, இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதைப் பிடிப்பான் என்று யெகோவா சொல்லுகிறாரென்றும்,
4 et Sédécias, roi de Juda, n'échappera pas à la main des Chaldéens, mais il sera livré entre les mains du roi de Babylone, il parlera avec lui bouche à bouche, et ses yeux verront ses yeux;
௪யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா கல்தேயருடைய கைக்குத் தப்பிப்போகாமல் பாபிலோன் ராஜாவின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படுவான்; அவன் வாய் இவன் வாயுடன் பேசும், அவன் கண்கள் இவன் கண்களைக் காணும்.
5 et il emmènera Sédécias à Babylone, et il y restera jusqu'à ce que je le visite, dit Yahvé, bien que tu combattes les Chaldéens, tu ne prospéreras pas? »'"
௫அவன் சிதேக்கியாவைப் பாபிலோனுக்குக் கொண்டுபோவான்; நான் அவனைச் சந்திக்கும்வரை அங்கே அவன் இருப்பான்; நீங்கள் கல்தேயருடன் போர்செய்தாலும் உங்களுக்கு வாய்ப்பதில்லை என்று யெகோவா சொல்லுகிறாரென்றும், நீ தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டியது என்ன என்று சொல்லி, யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அங்கே அவனை அடைத்து வைத்தான்.
6 Jérémie dit: « La parole de Yahvé m'a été adressée en ces termes:
௬அதற்கு எரேமியா சொன்னது: யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
7 Voici que Hanamel, fils de Shallum, ton oncle, vient te voir et te dit: « Achète mon champ qui est à Anathoth, car le droit de rachat te revient pour l'acheter ».
௭இதோ, உன் பெரிய தகப்பனாகிய சல்லூமின் மகன் அனாமெயேல் உன்னிடத்தில் வந்து: ஆனதோத்திலிருக்கிற என் நிலத்தை நீ வாங்கிக்கொள்; அதைக் கொள்ளுகிறதற்கு உனக்கே மீட்கும் அதிகாரம் உனக்கு உண்டு என்று சொல்வான் என்று சொன்னார்.
8 « Hanamel, fils de mon oncle, vint me voir dans la cour des gardes, selon la parole de Yahvé, et me dit: « Achète, je te prie, mon champ qui est à Anathoth, dans le pays de Benjamin, car le droit d'héritage est à toi, et le rachat est à toi. Achète-le pour toi-même. « Je sus alors que telle était la parole de Yahvé.
௮அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல், யெகோவாவுடைய வார்த்தையின்படி காவல் நிலையத்தின் முற்றத்தில் என்னிடத்திற்கு வந்து: பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சொத்துரிமை உமக்குண்டு, அதை மீட்கும் அதிகாரம் உமக்குரியது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்; அப்பொழுது அது யெகோவாவுடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன்.
9 J'achetai le champ d'Anathoth au fils de Hanamel, mon oncle, et je lui pesai l'argent, dix-sept sicles d'argent.
௯ஆகையால் என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலின் கையில், நான் ஆனதோத்திலிருக்கிற அவனுடைய நிலத்தைக்கொண்டு, அதின் விலைக்கிரயமாகிய பதினேழு சேக்கல் வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தேன்.
10 J'ai signé l'acte, je l'ai scellé, j'ai appelé des témoins et je lui ai pesé l'argent dans les balances.
௧0நான் பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும் போட்டு, சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசில் நிறுத்துக்கொடுத்தபின்பு,
11 Je pris l'acte d'achat, celui qui était scellé, contenant les conditions, et celui qui était ouvert;
௧௧நான் சட்டத்திற்கும் வழக்கத்திற்கும் ஏற்றபடி முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும் திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து,
12 et je remis l'acte d'achat à Baruch, fils de Neriah, fils de Mahséja, en présence de Hanamel, fils de mon oncle, et en présence des témoins qui avaient signé l'acte d'achat, devant tous les Juifs qui siégeaient dans la cour des gardes.
௧௨என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலுடைய கண்களுக்கு முன்பாகவும், கிரயப்பத்திரத்தில் கையெழுத்துப்போட்ட சாட்சிகளுடைய கண்களுக்கு முன்பாகவும், காவல் நிலையத்தின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த எல்லா யூதருடைய கண்களுக்கு முன்பாகவும், அதை மாசெயாவின் மகனாகிய நேரியாவின் மகனான பாருக்கினிடத்தில் கொடுத்து,
13 J'ai donné cet ordre à Baruch en leur présence:
௧௩அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பாருக்கை நோக்கி:
14 L'Éternel des armées, le Dieu d'Israël, dit: « Prends ces actes, cet acte d'achat scellé et cet acte ouvert, et mets-les dans un vase d'argile, pour qu'ils durent plusieurs jours.
௧௪இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும், திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி, அவைகள் அநேக நாட்கள் இருக்கும் விதத்தில் அவைகளை ஒரு மண்பாண்டத்தில் வை.
15 Car Yahvé des armées, le Dieu d'Israël, dit: « On achètera encore dans ce pays des maisons, des champs et des vignes.
௧௫ஏனெனில் இனி இந்த தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சைத்தோட்டங்களும் வாங்கப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றேன்.
16 Après avoir remis l'acte d'achat à Baruch, fils de Neriah, j'ai prié l'Éternel, en disant,
௧௬நான் கிரயப்பத்திரத்தை நேரியாவின் மகனாகிய பாருக்கினிடத்தில் கொடுத்தபின்பு, நான் யெகோவாவை நோக்கி செய்த விண்ணப்பமாவது:
17 « Ah Seigneur Yahvé! Voici que tu as fait les cieux et la terre par ta grande puissance et par ton bras étendu. Rien n'est trop dur pour toi.
௧௭ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய கரத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மால் செய்யமுடியாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.
18 Tu fais preuve de bonté envers des milliers de personnes, et tu reverses l'iniquité des pères dans le sein de leurs enfants après eux. Ton nom est le Dieu grand et puissant, le Yahvé des armées:
௧௮ஆயிரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிறவரும், பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்சந்ததியாரின் பிள்ளைகளின் மடியில் சரிக்கட்டுகிறவருமாகிய சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவனே,
19 grand par ses conseils et puissant par ses œuvres, qui a les yeux ouverts sur toutes les voies des enfants des hommes, pour rendre à chacun selon ses voies et selon le fruit de ses œuvres;
௧௯யோசனையில் பெரியவரும், செயலில் வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய வழிக்கு ஏற்றவிதமாகவும், அவனவனுடைய செயல்களின் பலனுக்கு ஏற்றவிதமாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.
20 qui a opéré des signes et des prodiges au pays d'Égypte, jusqu'à ce jour, tant en Israël que parmi les autres hommes; et tu t'es fait un nom, comme il l'est aujourd'hui;
௨0இஸ்ரவேலிலும் மற்ற மனிதருக்குள்ளும் இந்நாள்வரைக்கும் காணப்படுகிற அடையாளங்களையும் அற்புதங்களையும் தேவரீர் எகிப்துதேசத்தில் செய்து, இந்நாளில் நிற்கும் புகழ்ச்சியை உமக்கு உண்டாக்கி,
21 et tu as fait sortir ton peuple Israël du pays d'Égypte avec des signes, avec des prodiges, avec une main forte, avec un bras étendu, et avec une grande terreur;
௨௧இஸ்ரவேலாகிய உமது மக்களை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், பலத்த கையினாலும் ஓங்கிய கரத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்து,
22 et tu leur as donné ce pays, que tu avais juré à leurs pères de leur donner, un pays où coulent le lait et le miel.
௨௨அவர்களுடைய முற்பிதாக்களுக்கு நீர் கொடுப்பேன் என்று வாக்குக்கொடுத்த பாலும் தேனும் ஓடிய தேசமாயிருக்கிற இந்த தேசத்தை அவர்களுக்குக் கொடுத்தீர்.
23 Ils y sont entrés et l'ont possédé, mais ils n'ont pas obéi à ta voix et n'ont pas suivi ta loi. Ils n'ont rien fait de tout ce que tu leur avais ordonné de faire. C'est pourquoi tu as fait venir sur eux tout ce malheur.
௨௩அவர்கள் அதற்குள் நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் உமது சத்தத்தைக் கேட்காமலும், உமது நியாயப்பிரமாணத்தில் நடவாமலும், செய்யும்படி நீர் அவர்களுக்குக் கற்பித்ததொன்றையும் செய்யாமலும் போனார்கள்; ஆதலால் இந்தத் தீங்கையெல்லாம் அவர்களுக்கு நேரிடச்செய்தீர்.
24 « Voici, on a construit des rampes de siège contre la ville pour la prendre. La ville est livrée entre les mains des Chaldéens qui la combattent, à cause de l'épée, de la famine et de la peste. Ce que tu as dit est arrivé. Voici, tu le vois.
௨௪இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளை நோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் போர்செய்கிற கல்தேயரின் கையில் கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர்.
25 Tu m'as dit, Seigneur Yahvé: « Achète le champ à prix d'argent, et appelle des témoins »; mais la ville a été livrée entre les mains des Chaldéens. »
௨௫கர்த்தராகிய ஆண்டவரே, நகரம் கல்தேயரின் கையில் கொடுக்கப்படுகிறதாயிருந்தும், தேவரீர் என்னை நோக்கி: நீ உனக்கு ஒரு நிலத்தை விலைக்கிரயமாகக்கொண்டு, அதற்குச் சாட்சிகளை வையென்று சொன்னீரே என்றேன்.
26 Alors la parole de Yahvé fut adressée à Jérémie, en ces termes:
௨௬அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
27 « Voici, je suis Yahvé, le Dieu de toute chair. Y a-t-il quelque chose de trop dur pour moi?
௨௭இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய யெகோவா; என்னால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?
28 C'est pourquoi Yahvé dit: Voici, je vais livrer cette ville entre les mains des Chaldéens, entre les mains de Nabuchodonosor, roi de Babylone, et il la prendra.
௨௮ஆதலால், இதோ, நான் இந்த நகரத்தைக் கல்தேயரின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் ஒப்புக்கொடுக்கிறேன், அவன் இதைப் பிடிப்பான் என்று யெகோவா சொல்லுகிறார்.
29 Les Chaldéens, qui combattent cette ville, viendront et mettront le feu à cette ville, et ils la brûleront avec les maisons sur les toits desquelles ils ont offert de l'encens à Baal et versé des libations à d'autres dieux, pour m'irriter.
௨௯இந்த நகரத்திற்கு விரோதமாக போர்செய்கிற கல்தேயர் உள்ளே நுழைந்து, இந்த நகரத்தைத் தீக்கொளுத்தி, இதைச் சுட்டெரிப்பார்கள்; எனக்குக் கோபமுண்டாக்கும்படி எந்த வீடுகளின்மேல் பாகாலுக்குத் தூபங்காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளை ஊற்றினார்களோ, அந்த வீடுகளையும் சுட்டெரிப்பார்கள்.
30 « Car les enfants d'Israël et les enfants de Juda n'ont fait que ce qui était mauvais à mes yeux dès leur jeunesse; car les enfants d'Israël n'ont fait que m'irriter par l'ouvrage de leurs mains, dit l'Éternel.
௩0இஸ்ரவேல் மக்களும் யூதா மக்களும் தங்கள் சிறுவயதுமுதல் என் பார்வைக்குப் பொல்லாப்பானதையே செய்துவந்தார்கள்; இஸ்ரவேல் மக்கள் தங்கள் கைகளின் செய்கையினால் எனக்குக் கோபத்தையே உண்டாக்கி வந்தார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
31 Car cette ville a été pour moi une provocation à ma colère et à ma fureur, depuis le jour où ils l'ont bâtie jusqu'à ce jour, pour que je l'enlève de devant ma face,
௩௧அவர்கள் இந்த நகரத்தைக் கட்டின நாள்முதற்கொண்டு, இந்நாள்வரைக்கும் அது எனக்குக் கோபமுண்டாகவும், எனக்கு உக்கிரமுண்டாக்கவும், நான் அதை என் முகத்தை விட்டு அகற்றுகிறதற்கு ஏதுவாகவும் இருந்தது.
32 à cause de tout le mal que les enfants d'Israël et les enfants de Juda ont fait pour m'irriter, eux, leurs rois, leurs princes, leurs prêtres, leurs prophètes, les hommes de Juda et les habitants de Jérusalem.
௩௨எனக்குக் கோபமுண்டாகும்படிக்கு இஸ்ரவேல் மக்களும், யூதா மக்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும், யூதாவின் மனிதரும், எருசலேமின் குடிகளும் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் இப்படி நடக்கும்.
33 Ils m'ont tourné le dos, et non le visage. Bien que je les aie instruits, me levant de bonne heure et les instruisant, ils n'ont pas écouté pour recevoir l'instruction.
௩௩முகத்தையல்ல, முதுகை எனக்குக் காட்டினார்கள்; நான் ஏற்கனவே அவர்களுக்கு உபதேசித்தும் அவர்கள் புத்தியை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்.
34 Mais ils ont placé leurs abominations dans la maison qui porte mon nom, pour la souiller.
௩௪அவர்கள் என் பெயர் சூட்டப்பட்ட ஆலயத்தைத் தீட்டுப்படுத்துவதற்கு, தங்கள் அருவருப்புகளை அதில் வைத்தார்கள்.
35 Ils ont bâti les hauts lieux de Baal, qui sont dans la vallée du fils de Hinnom, pour faire passer leurs fils et leurs filles par le feu à Moloch, ce que je ne leur ai pas commandé. Il ne m'est même pas venu à l'esprit qu'ils devaient faire cette abomination, pour faire pécher Juda. »
௩௫அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் தீக்கடக்கச் செய்யும்படி இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கிலிருக்கிற பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவம் செய்யவைப்பதற்கு அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதில் தோன்றினதுமில்லை.
36 Maintenant, Yahvé, le Dieu d'Israël, dit au sujet de cette ville dont vous dites: « Elle a été livrée entre les mains du roi de Babylone par l'épée, par la famine et par la peste »:
௩௬இப்படியிருக்கும்போது பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும், பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போகும் என்று நீங்கள் சொல்லுகிற இந்த நகரத்தைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்:
37 « Voici, je les rassemblerai de tous les pays où je les ai chassés dans ma colère, dans ma fureur et dans ma grande indignation, et je les ramènerai dans ce lieu. Je les ferai habiter en sécurité.
௩௭இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லா தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த இடத்திற்குத் திரும்பிவரவும் இதில் சுகமாய்த் தங்கியிருக்கவும் செய்வேன்.
38 Alors ils seront mon peuple, et je serai leur Dieu.
௩௮அவர்கள் என் மக்களாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.
39 Je leur donnerai un seul cœur et une seule voie, afin qu'ils me craignent toujours, pour leur bien et celui de leurs enfants après eux.
௩௯அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்சந்ததியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாக எல்லா நாட்களிலும் எனக்குப் பயப்படுவதற்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,
40 Je conclurai avec eux une alliance éternelle, et je ne me détournerai pas de les suivre pour leur faire du bien. Je mettrai ma crainte dans leur cœur, pour qu'ils ne s'éloignent pas de moi.
௪0அவர்களுக்கு நன்மை செய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லை என்கிற நிலையான உடன்படிக்கையை அவர்களுடன் செய்து, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாமலிருக்க, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்தில் வைத்து,
41 Oui, je me réjouirai d'eux pour leur faire du bien, et je les planterai dans ce pays avec assurance, de tout mon cœur et de toute mon âme. »
௪௧அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்த தேசத்தில் நிச்சயமாய் நாட்டுவேன்.
42 Car Yahvé dit: « De même que j'ai fait venir sur ce peuple tout ce grand malheur, de même je ferai venir sur lui tout le bien que je lui ai promis.
௪௨நான் இந்த மக்கள்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரச்செய்ததுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
43 On achètera des champs dans ce pays dont vous dites: « Il est désert, sans homme ni bête. Il est livré entre les mains des Chaldéens ».
௪௩மனிதனும் மிருகமும் இல்லாதபடி அழிந்துபோனது என்றும், கல்தேயரின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது என்றும், நீங்கள் சொல்லுகிற இந்த தேசத்தில் நிலங்கள் வாங்கப்படும்.
44 Onachètera des champs à prix d'argent, on signera les actes, on les scellera, on appellera des témoins, dans le pays de Benjamin, dans les environs de Jérusalem, dans les villes de Juda, dans les villes de la montagne, dans les villes de la plaine, dans les villes du Midi, car je ferai revenir leur captivité, dit Yahvé.
௪௪பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைப்பாங்கான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாக வாங்கப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.