< Битие 47 >
1 И тъй, Иосиф влезе при Фараона и му извести, казвайки: Баща ми и братята ми, стадата им и добитъкът им, и всичко що имат дойдоха от Ханаанската земя, и сега са в Гесенската земя.
௧யோசேப்பு பார்வோனிடம் சென்று: “என்னுடைய தகப்பனும், சகோதரர்களும், தங்களுடைய ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடும்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள்” என்று சொல்லி;
2 И взе петима от братята си та ги представи на Фараона.
௨தன் சகோதரர்களில் ஐந்துபேரைப் பார்வோனுக்கு முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினான்.
3 И Фараон рече на братята му: Що е занятието ви? А те казаха на Фараона: Ние, слугите ти, и бащите ни, сме овчари.
௩பார்வோன் அவனுடைய சகோதரர்களை நோக்கி: “உங்களுடைய தொழில் என்ன” என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: “உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில் சொன்னதுமன்றி,
4 Рекоха още на Фараона: Дойдохме да поживеем в тая земя, защото няма пасище за стадата на слугите ти, понеже гладът се засили в Ханаанската земя; затова, молим ти се нека живеят слугите ти в Гесенската земя.
௪கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாததால், இந்த தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்க தயவுசெய்யவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்கள்.
5 И Фараон говори на Иосифа, казвайки: Баща ти и братята ти дойдоха при тебе;
௫அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி: “உன்னுடைய தகப்பனும், சகோதரர்களும் உன்னிடத்தில் வந்திருக்கிறார்களே.
6 Египетската земя е пред тебе; настани баща си и братята си в най-добрата местност от земята; нека живеят в Гесенската земя. И ако знаеш, че някои от тях са способни мъже, постави ги надзиратели над моя добитък.
௬எகிப்துதேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்திலுள்ள நல்ல இடத்திலே உன்னுடைய தகப்பனையும், சகோதரர்களையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்திருந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக ஏற்படுத்தலாம் என்றான்.
7 След това Иосиф въведе баща си Якова и го представи на Фараона; и Яков благослови Фараона.
௭பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.
8 И Фараон рече на Якова: Колко е числото на годините на живота ти?
௮பார்வோன் யாக்கோபை நோக்கி: “உமக்கு வயது என்ன” என்று கேட்டான்.
9 И Яков каза на Фараона: Числото на годините на пришелствуването ми е сто и тридесет години; малко и зло е било числото на годините на живота ми, и не достигна до числото на годините на живота на бащите ми, във времето на тяхното пришелствуване.
௯அதற்கு யாக்கோபு: “நான் பரதேசியாக வாழ்ந்த நாட்கள் 130 வருடங்கள்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் வேதனை நிறைந்ததுமாக இருக்கிறது; அவைகள் பரதேசிகளாக வாழ்ந்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை” என்று பார்வோனுடனே சொன்னான்.
10 И като благослови Фараона, Яков излезе от Фараоновото присъствие.
௧0பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போனான்.
11 Тогава Иосиф настани баща си и братята си, като им даде имот в Египетската земя, в най-добрата местност от земята в Рамесийската земя, според както заповяда Фараон.
௧௧பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன்னுடைய தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் எகிப்துதேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டைச் சொந்தமாகக் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான்.
12 И Иосиф хранеше баща си, братята си и целия си бащин дом с хляб, според големината на челядите им.
௧௨யோசேப்பு தன்னுடைய தகப்பனையும், சகோதரர்களையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாக ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான்.
13 А нямаше хляб по цялата земя, защото гладът дотолкова се засилваше, щото Египетската земя и Ханаанската земя се изнуриха от глада.
௧௩பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது; தேசமெங்கும் ஆகாரம் கிடைக்காமல்போனது; எகிப்துதேசமும் கானான்தேசமும் பஞ்சத்தினாலே நலிந்துபோனது.
14 И Иосиф прибра всичките пари, които се намираха в Египетската и Ханаанската земя, за житото, което купуваха; и Иосиф донесе парите във Фараоновия дом.
௧௪யோசேப்பு எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் வாங்கியவர்களிடத்திலிருந்து பெற்று, அதைப் பார்வோன் அரண்மனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான்.
15 И като се свършиха всичките пари в Египетската земя и Ханаанската земя, всичките египтяни дойдоха при Иосифа и рекоха: Дай ни хляб; защо да умираме пред тебе, понеже се свършиха парите ни?
௧௫எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணம் செலவழிந்தபோது, எகிப்தியர்கள் எல்லோரும் யோசேப்பினிடத்தில் வந்து: “எங்களுக்கு ஆகாரம் தாரும்; பணம் இல்லை, அதினால் நாங்கள் உமக்கு முன்பாகச் சாகவேண்டுமோ” என்றார்கள்.
16 А Иосиф рече: Ако парите ви са се свършили, докарайте добитъка си, и ще ви дам хляб срещу добитъка ви.
௧௬அதற்கு யோசேப்பு: “உங்களிடத்தில் பணம் இல்லாமல்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன்” என்றான்.
17 И тъй, докарваха добитъка си на Иосифа; и Иосиф им даваше хляб срещу конете, стадата, добитъка и ослите им; и така, през оная година той ги прехрани с хляб срещу всичкия им добитък.
௧௭அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டுவந்தார்கள்; யோசேப்பு குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக்கொண்டு, அந்த வருடம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான்.
18 И като се измина оная година, дойдоха при него и другата година и му казаха: Няма да скрием от господаря си, че всичките ни пари се свършиха; и добитъкът стана на господаря ни; не остана друго пред господаря ни освен телата ни и земята ни.
௧௮அந்த வருடம் முடிந்தபின், அடுத்தவருடத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: “பணமும் செலவழிந்துபோனது; எங்களுடைய ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்களுடைய சரீரமும், நிலமுமே அல்லாமல், எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை; இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல.
19 Защо да измрем пред очите ти и земята ни да запустее? Купи нас и земята ни за хляб, и ние ще бъдем слуги на Фараона, и земята ни за него ще ражда. Дай ни и семе, за да останем живи да не умрем, и да не запустее земята.
௧௯நாங்களும் எங்களுடைய நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்களுடைய நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்களுடைய நிலங்களும் பார்வோனுக்கு உடைமைகளாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாகப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத்தானியத்தைத் தாரும்” என்றார்கள்.
20 И тъй, Иосиф закупи за Фараона цялата Египетска земя, защото египтяните продаваха всеки нивата си, понеже гладът се засилваше над тях; така земята стана Фараонова.
௨0அப்படியே எகிப்தியர்கள் தங்களுக்குப் பஞ்சம் அதிகமானதால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் எல்லாவற்றையும் பார்வோனுக்காக வாங்கினான்; இந்த விதமாக அந்த பூமி பார்வோனுடையதாயிற்று.
21 И той пресели населението в градовете от единия край до другия край на Египетските предели.
௨௧மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லை முதல் மறு எல்லைவரைக்குமுள்ள மக்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகச்செய்தான்.
22 Само земята на жреците не закупи, защото жреците имаха определен от Фараона дял и се прехранваха от дела, който Фараон им даде; затова не продадоха земята си.
௨௨ஆசாரியர்களுடைய நிலத்தை மாத்திரம் அவன் வாங்கவில்லை; அது பார்வோனாலே ஆசாரியர்களுக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததாலும், பார்வோன் அவர்களுக்குக் கொடுத்த மானியத்தினாலே அவர்கள் வாழ்க்கை நடத்திவந்ததாலும், அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை.
23 Тогава Иосиф каза на людете: Ето, днес закупих вас и земята ви за Фараона; на ви семе та засейте земята.
௨௩பின்னும் யோசேப்பு மக்களை நோக்கி: “இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத் தானியம், இதை நிலத்தில் விதையுங்கள்.
24 Затова във време на беритбата ще давате петата част на Фараона, а четирите части ще бъдат за вас да засеете нивите, и за храна за вас и за домашните ви, и за храна на децата ви.
௨௪விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கைப் பார்வோனுக்குக் கொடுக்கவேண்டும்; மற்ற நான்கு பங்கும் வயலுக்கு விதையாகவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஆகாரமாகவும் உங்களுடையதாகவும் இருக்கட்டும்” என்றான்.
25 И те рекоха: Ти опази живота ни; нека придобием благоволението на господаря си, и ще бъдем слуги на Фараона.
௨௫அப்பொழுது அவர்கள்: “நீர் எங்களுடைய உயிரைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறோம்” என்றார்கள்.
26 И Иосиф постави това за повеление в Египетската земя, както е и до днес, да се дава петата част на Фараона; само земята на жреците единствено не стана Фараонова.
௨௬ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு விதித்த கட்டளையின்படி எகிப்து தேசத்திலே இந்த நாள்வரைக்கும் நடந்துவருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமலிருந்தது.
27 И тъй, Израил се засели в Египетската земя, в Гесенската страна, гдето придобиваха имения, наплодяваха се, и твърде се размножаваха.
௨௭இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலுள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள்; அங்கே நிலங்களை உரிமைபாராட்டி, மிகவும் பலுகிப் பெருகினார்கள்.
28 И Яков живя седемнадесет години в Египетската земя, така че числото на годините на Яковия живот стана сто четиридесет и седем години.
௨௮யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருடங்கள் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்றுநாற்பத்தேழு வருடங்கள்.
29 А като наближи времето, когато Израил трябваше да умре, повика сина си Иосифа и му каза: Ако съм придобил твоето благоволение, моля, тури ръката си под бедрото ми, и закълни ми се, че ще ми покажеш тая благост и вярност: да не ме погребеш в Египет,
௨௯இஸ்ரவேல் மரணமடையும் காலம் நெருங்கியது. அப்பொழுது அவன் தன் மகனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: “என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து எனக்கு நம்பிக்கையும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம் செய்யாதிருப்பாயாக.
30 но когато почина с бащите си, да ме пренесеш от Египет и да ме погребеш в тяхната гробница. А той рече: Ще направя според както си казал.
௩0நான் என் பிதாக்களோடு படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்செய்திருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்செய்” என்றான். அதற்கு அவன்: “உமது சொற்படி செய்வேன்” என்றான்.
31 И рече Яков: Закълни ми се; и той му се закле. Тогава Израил се поклони върху възглавницата на леглото.
௩௧அப்பொழுது அவன்: “எனக்கு ஆணையிட்டுக்கொடு” என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கை கோலில் சாய்ந்து தொழுதுகொண்டான்.